தமிழ்நாடு

உயர்நீதிமன்ற தீர்ப்பு ஊசிவெடி: தமிழிசை

உயர்நீதிமன்ற தீர்ப்பு ஊசிவெடி: தமிழிசை

webteam

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, ஊசிவெடியாகிவிட்டது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தரும் இருவேறுவிதமாகத் தீர்ப்பளித்துள்ளனர். 

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தமிழக பாஜ தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், ’தீர்ப்பு வந்திருக்கிறது, தீர்வில்லாமல் வந்திருக்கிறது. யாருக்கும் சாதகம் யாருக்கும் பாதகம் இல்லாமல் வந்திருக்கிறது. நான் காலையில் இதுபற்றி சொல்லும்போது, அது அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், இல்லையென்றால் புஸ்வானமாக போகவும் செய்யலாம் என்று கூறியிருந்தேன். ஆனால் அது அணுகுண்டாகவும் இல்லாமல் புஸ்வாணமாகவும் இல்லாமல் ஊசி வெடியாக வந்திருக்கிறது’ என்றார்.