தமிழ்நாடு

சோனியா நலம் பெற தமிழிசை வேண்டுதல்

சோனியா நலம் பெற தமிழிசை வேண்டுதல்

webteam

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நலம் பெற இறைவனை வேண்டுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

திடீர் வயிறுக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் காங் தலைவர் சோனியா காந்தி. இன்று சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பியுள்ளார். அவர் உடல்நிலை குறித்து தமிழ பாஜக தலைவர் தமிழிசை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறோம்” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி. தமிழக காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் பாஜகவைச் சார்ந்த தமிழிசை கட்சி எல்லைகளை கடந்து சோனியவை நலம் பெற வாழ்த்தியிருக்கிறார்.