சென்னையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் விழா பாரம்பரியக் கலைகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழிசை சவுந்தரராஜன் வாள்சண்டை, மான்கொம்பு சண்டையில் பங்கேற்று அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜகவின் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தைத்திருநாளை வரவேற்கும் விதமாக பொங்கல் வைத்து அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில், தமிழிசை சவுந்தரராஜன் வாள்சண்டை, மான்கொம்பு சண்டையில் பங்கேற்று அனைவரையும் உற்சாகப்படுத்தினார். மேலும், கைலாய இசை வாத்தியம் வாசித்து மகிழ்ச்சி பொங்க பொங்கல் விழாவைக் கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.