தமிழ்நாடு

விமானத்தில் நடந்தது என்ன ? தமிழிசை விளக்கம்

webteam

விமானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணத்தின் போது பாஜக குறித்து தமிழிசையிடம் விமர்சித்த தூத்துக்குடிப் பெண் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் தமிழிசை பின்னால் அமர்ந்திருந்த சோபியா என்ற பெண் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டுள்ளார். இது குறித்து தமிழிசை அளித்த புகாரில் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். தமிழிசை உள்ளிட்ட 10 பேர் மீது சோபியா குடும்பத்தினர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரையில் பேசிய தமிழிசை, “இரவு 10.20க்கு எனது ஃப்ளைட். அந்தப் பெண் 10.22க்கு தமிழிசை இப்ப என்னோட ப்ளைட்ல இருக்காங்கங்னு ட்வீட் பண்ணீருக்காங்க. பாஜக என்பதுடன் சில வார்த்தைகளை சேர்த்து ஒழிக என நான் கூறுவேன். என்னை ப்ளைட்ல இருந்து வெளியே அனுப்பிடுவாங்களா? எனவும் ட்வீட் செய்துள்ளார். அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. திட்டமிட்டு ஒரு அரசியல்கட்சித் தலைவரை இப்படி நடத்துவார்கள், அதற்கு சக அரசியல் கட்சித் தலைவர் இப்படி நடந்துகொள்கிறார்கள். ஸ்டாலின் அவர்களின் ட்வீட் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கருணாநிதி இருந்திருந்தால் இதை செய்திருக்கமாட்டார். உண்மையில் செய்திருக்கமாட்டார். இதனால் சரியான அரசியலை அவர் நடத்தவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. இதுபோன்ற நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருந்தால், நான் முதல் ஆளாக குரல் கொடுத்திருப்பேன்” எனக்கூறியுள்ளார்.