தமிழ்நாடு

மக்களைப் பாதிக்கும் வகையில் போராடுவது சரியா?: தமிழிசை கேள்வி

மக்களைப் பாதிக்கும் வகையில் போராடுவது சரியா?: தமிழிசை கேள்வி

webteam

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவது வேதனையளிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

போக்‌குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வ‌ரிலால் புரோஹித்தை இன்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் தமிழிசை, “போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவது வேதனையளிக்கிறது. பயணிகளை பாதியில் இறக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது சரியானது அல்ல. ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் பேருந்துகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் இன்னும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பிரச்னைக்கு உடனே தீர்வு கண்டு, பொதுமக்களுக்குப் பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன். ஒருபோதும் பொதுமக்கள் அவதிப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாது.” என்று கூறினார்.