தமிழ்நாடு

“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை

“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை

webteam

திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது எனத் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறோம். திமுக தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின் மீண்டும் இன்று முதல் கட்சி நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. கலைஞர், ஜெயலலிதா இல்லாத ஒரு அரசியல் களத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு காண்கிறோம். இவர்கள் இடத்தை நிரப்ப திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் அந்த வெற்றி இடத்தை நிரப்ப முடியாது. ஜெயலலிதா கலைஞர் இவர்கள் எல்லாம் போராடிதான் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளனர்” என்று கூறினார்.

மேலும் “உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். தற்போது நீதி மன்றத்திற்கே உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது. பல்கலைக் கழகங்களில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றிருப்பது வேதனையே. மார்க் வழங்குவதில் மட்டுமல்ல இடம் வழங்குவதிலும் முறைகேடு நடந்துள்ளது. கல்வி, ஊழல் நிறைந்ததாக மாறி வருகிறது. இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வாக்கையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். மார்க்கையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். சிலைத் திருட்டில் நியாமான நடவடிக்கை எடுத்திட வேண்டும். உண்மையான விசாரனையை தவிர்த்து வேற ஒரு விசாரனைக்கு மாற்றியமைத்தது உண்மையை மறைக்கவோ என சந்தேகம் அனைத்து மக்களும் எழத் தொடங்கியுள்ளது. ரஜினிகாந்த், அழகிரி கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் நிறைந்திருப்பதை எச்சரிக்கை கருத்தாக என்னி தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.