தமிழக பாஜக மாநில தலைவர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார்.
தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக இன்று காலை நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது தமிழிசை சவுந்தராஜன், மாநில பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தமிழக மாநில பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.