தமிழ்நாடு

“கருப்பட்டி அல்ல கற்பகக் கட்டி” : தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

“கருப்பட்டி அல்ல கற்பகக் கட்டி” : தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

webteam

ஊட்டச்சத்து மிகுந்த கருப்பட்டியை பயன்படுத்துவது குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் வீடியோ மூலம் பேசியிருக்கும் அவர்,“இந்த மாதம் ஊட்டச்சத்து மாதம். ஊட்டச்சத்து உள்ள பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய மாதம். அதனால் எனது கையில் வைத்திருப்பது. இந்த கருப்பட்டியை கற்பகக் கட்டி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இதில் சத்து இருக்கிறது.

கால்சியம் இருக்கிறது. எலும்புகளை பயன்படுத்துவதற்கும், இளைமையை தருவதற்கும், ரத்தசோகையை குணப்படுத்துவதற்கும் இதில் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இதை குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கொடுத்தால் ரத்தசோகையின்றி சுறுசுறுப்புடன் இருப்பார்கள். எனவே இதை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவோம். பலன்பெறுவோம். ஊட்டச்சத்தை அதிகரிப்போம்” என்று தெரிவித்தார்.