தமிழ்நாடு

பெட்ரோல் விலை உயர்வுக்கு பாஜக கண்டனம்

Rasus

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசும், டீசல், லிட்டருக்கு 1 ரூபாய் 76 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு உயர்த்தியதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. பால் விலை உயர்த்தப்பட்டிருப்பதும் தமிழக மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.