சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது.
சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கில் இதற்கான அறிமுக விழா நடைபெற்றது.இவ்விழாவில் எழுத்தாளர்கள், சாருநிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தரராஜன், மதன், பாஸ்கி, கவிதா சொர்ணவேல், ஸ்ரீராம் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களும், வாசகர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் உரிமையாளர்கள் , தமிழ் சூழலில் கதைகளை எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகள் மண் மணம் மாறாமல், உயர்ந்த மானிட சிந்தனையோடு இருக்கிறது. ஆனால் அது குறுகிய எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது.
தமிழ் படைப்பாளிகளின் எழுத்துகள் சர்வதேச தரத்திற்கு நிகராக இருக்கிறது. ஆனால் அது ஒரு குறுகிய நில எல்லைக்குள் குறுகிய வணிகப்பரப்பிற்குள் இருக்கிறது.இதனை ஆங்கிலத்தில் தரமாக மொழிபெயர்த்தால், சர்வதேச அளவில் ஆகசிறந்த படைப்பாக அமையும் என்றார்.இதற்கு தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் மனமுவந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தாக கூறினர்.
தற்போது பத்து நூல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு மாதமும் ஐந்து முதல் ஆறு புத்தகங்களை வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி வருவதாக கூறினர். இந்த முயற்சியில் இணைந்த பல மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.