தமிழ்நாடு

தமிழறிஞர் கால்டுவெல் பிறந்தநாள்: இடையன் குடியில் கோலாகலம்

kaleelrahman

தமிழறிஞர் பேராயர் ராபர்ட் கால்டுவெல் பிறந்தநாள் அவர் வாழ்ந்த இடையன் குடியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வடக்கு அயர்லாந்தில் பிறந்து ஸ்காட்லாந்தில் கல்வி கற்று 1838 ஆம் ஆண்டு இந்தியா வந்து 53 ஆண்டுகள் அயராது தமிழ்ப்பணி, இறைப்பணி, கல்விப்பணி மற்றும் சமூகப்பணியாற்றியவர் ராபர்ட் கால்டுவெல்.

மொழியியல் அறிஞரான இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்து, அதை வடஇந்திய மொழிகளோடும், சமஸ்கிருதத்தோடும் ஒப்பிட்டு பார்த்து அதன் அடிப்படையில் தமிழ்மொழியும் மற்ற தென்னிந்திய மொழிகளும் சமஸ்கிருதத்தை விட தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றவை என்று உரத்துச் சொன்னவர்.

இந்த ஆய்வின் விளைவான திராவிட மொழிகளில் ஒப்பிட்டு இலக்கணம் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். இத்தனை புகழ் பெற்ற ராபர்ட் கால்டுவெல் 208வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மற்றும் கோட்டாட்சியர் சிந்து திசையன்விளை வட்டாட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.