தமிழறிஞர் இளங்குமரனாரின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தமிழ்ப் பேராயம் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான ஓர் அறிக்கையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், தமிழ்ப்பேராயம் அமைப்பை உருவாக்க நினைத்தபோது, அதற்காக அமைக்கப்பட்ட வழிகாட்டல் குழுவின் தலைவராக இளங்குமரனார் இருந்தது நினைவுகூரப்பட்டுள்ளது. தமிழ்ப்பேராய நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்ற இளங்குமரனார், தமது அன்பளிப்பாக 20 ஆயிரம் அரிய நூல்களைத் தமிழ்ப் பேராயத்திற்கு வழங்கியதை மறக்க முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியத்தை மையமாக வைத்து தொல்காப்பியர் காட்டும் குடும்பம் என்ற அரிய ஆய்வுநூல், தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம் என்ற ஆய்வு நூலையும் பேராயத்திற்காக இளங்குமரனார் எழுதியுள்ளார் என்று புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.