leema rose & eps  web
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்.. இவரின் சொத்து விவரம் தெரியுமா?

தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரராக கவனம் ஈர்த்துள்ளார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ்.

PT WEB

தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜயின் தமிழக வெற்றி கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகிறது .

தலைமை செயலகம்

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர்களது சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த வகையில் அதிமுக கூட்டணியில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரூ 1,048 கோடிக்கு சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். இவர்தான் தமிழ்நாட்டில் போட்டியிடுபவர்களில் பணக்கார வேட்பாளராக இருக்கிறார்

லீமா ரோஸின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 1,048 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களும் வெளியாகியுள்ளன . லாட்டரி தொழிலதிபரான இவரது கணவர் மார்டின் பெயரில் 4,159 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், இவர்களது மகன் ஜோஸ் மார்டின் பெயரில் 665 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Martin & Leema Rose

லீமா ரோஸின் கணவர் மார்டின் தேர்தல் பத்திரங்கள் மூலமாக சர்ச்சையில் சிக்கியவர் . தேர்தல் பத்திரம் மூலமாக மார்டின் திமுகவுக்கு சுமார் 509 கோடியும், திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ542 கோடியும், பாஜகவுக்கு ரூ100 கோடியும் நன்கொடையாக வழங்கியிருந்தார் .