தமிழ்நாடு

தொழில்முனைவோர்களுக்கு தமிழ்நாடு வளர்ச்சியை தரும் - முதலமைச்சர் ஸ்டாலின்

தொழில்முனைவோர்களுக்கு தமிழ்நாடு வளர்ச்சியை தரும் - முதலமைச்சர் ஸ்டாலின்

கலிலுல்லா

தொழில் செய்வதற்கு ஏற்றதாகவும் வளர்ச்சியை தரும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கும் என PAN IIT-ன் உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், மின்வசதி மற்றும் திறன்மிகு பணியாளர்கள் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கான சிறந்த மாநிலம் எனவும் கூறினார். தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்க ஒற்றைச் சாளர முறையும் பின்பற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தகவல் தொழிநுட்பத்துறையை பொறுத்தவரையில், இந்தியாவில் இருந்து அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் ஒன்றாகவும், புதுமையான சிந்தையுடன் களமிறங்கும் தொழில் முனைவோர்களுக்கு ஏற்ற சிறந்த களமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என அவர் கூறினார்.