தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் முதல் மழை ! வெதர்மேன் கணிப்பு

சென்னையில் நாளை மறுநாள் முதல் மழை ! வெதர்மேன் கணிப்பு

webteam

நாளை மறுநாள் (நவம்பர் 20) முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரத்தை கணக்கிட்டு அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் வெதர்மேன் பிரதீப் பதிவிட்டு வருகிறார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவின்படி, நவம்பர் 20 முதல் 22 வரை டெல்டா முதல் சென்னை வரையிலான மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு:

கஜாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு நவம்பர் 19-20 அன்று (ஒருநாள்) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 19ம் தேதியில் தொடங்கும் மழை 20ம் தேதி அதிகனமழையாகவும் மாற வாய்ப்புள்ளது. காற்று அடிக்க வாய்ப்பில்லை. ஆனால் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை:
காஞ்சிபுரம், திருவள்ளூர் ,சென்னை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பொறுத்தவரை நவம்பர் 20 முதல் 22 வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புண்டு 

புயல் குறித்து:
புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் கனமழைக்கு வழிவகுக்கும். என்று தெரிவித்துள்ளார்.