தமிழகத்தில் இன்னமும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாத நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காவல்துறை சோதனையை தவிர்க்கும் பொருட்டு ஆற்றைக் கடந்து ஏராளமான மதுகுடிப்போர் காரைக்கால் சென்று மது வாங்கி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காரைக்கால் பகுதியை இணைக்கும் பகுதியில் 24மணி நேரமும் சோதனை நடைபெறுவதால் சோதனை சாவடி இல்லாத பகுதியில் ஆற்றை இணைக்கும் சாலைவரை சென்று, வாகனங்களை நிறுத்திவிட்டு ஆற்றை கடந்து சென்று காரைக்காலில் மதுபானம் வாங்கித் திரும்புகின்றனர்.