tamil nadu rain update PT
தமிழ்நாடு

உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. எங்கெங்கு கனமழைக்கு வாய்ப்பு? | RAIN | TAMILNADU

வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

வங்கக் கடலில் மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும்.

இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்பலத்த தரைக்காற்று வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நாளையும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு

மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.