தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: காலை 9 மணி வரை 13.80 சதவீத வாக்குகள் பதிவு!

JustinDurai

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் காலை 9 மணி வரையிலான நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இந்நிலையில் காலை 9 மணி வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் அதிகபட்சமாக 20.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் 10.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனிடையே தமிழகத்தின் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக்கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

2016 தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவின் போது காலை 9 மணி வரையிலான நிலவரப்படி 18.32 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.