political leaders
political leaders pt desk
தமிழ்நாடு

’தண்ணீர் திறந்துவிட முடியாது’ - கர்நாடக துணை முதல்வரின் கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்

webteam

காவிரி டெல்டா கடைமடை பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் சென்றடையாத நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக துணை முதலமைச்சரும் நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக துணை முதலமைச்சரின் தகவலுக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஈபிஎஸ் - ஓபிஎஸ் கருத்து;-

காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு உடனடியாக முறியடிக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு உரிய காவேரி நீரைப் பெற்றுத்தர திமுக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

tk.sivakumar

ராமதாஸ் அறிக்கை;-

பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்கக் கூடாதென கர்நாடகா அரசு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில சந்தித்து வலியுறுத்தி இருக்கும் நிலையில், தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகளை பறிக்க நினைக்கும் கர்நாடகாவின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது என்றார்.

டிகேஎஸ்.இளங்கோவன்;-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடகா அணைக்கட்டக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக டிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை;-

காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு தமிழக காங்கிரஸ் எப்போதும் துணை இருக்கும் என அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.