தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஸ் லக்கானி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். 1997 தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர். தமிழக அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். ராஜேஷ் லக்கானிக்கு வேறு பொறுப்பு வழங்கப்பட உள்ளதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.