model image x page
தமிழ்நாடு

தமிழகத்தில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைப்பு.. விதிகளைப் பின்பற்றவில்லை என நடவடிக்கை!

தமிழகத்தில் 50 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

PT WEB

தமிழகத்தில் 50 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு வெளியிட்ட அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு 150 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள், இந்த ஆண்டு 100 ஆகக் குறைந்துள்ளன. மருத்துவ இடங்களை 250ஆக உயர்த்தக் கோரி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், விண்ணப்பித்திருந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி 50 இடத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மருத்துவ கல்லூரி

நாடு முழுவதும் 766 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 900 எம்பிபிஎஸ் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட மொத்தம் 77 கல்லூரிகளில் 12 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிஎஸ்பி கல்லூரியைத் தவிர மற்ற 76 மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டைப் போலவே மருத்துவ இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.