தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மூன்று வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும், சில மனுக்கள் தற்போது கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி புதிய தலைமுறைக்கு அளித்துள்ள தகவலில், “தேர்தல் அறிவிப்புக்கான பணிகள் முடிவடைந்ததால், நாளையில் இருந்து இந்த வாரத்திற்குள் கண்டிப்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.