தொடங்கியது சட்டமன்ற கூட்டத்தொடர்: மறைந்த உறுப்பினர்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9, 10 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியுள்ளது. இதில் மறைந்த உறுப்பினர்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.