GST வசூல் PT
தமிழ்நாடு

தமிழகத்தில் செப்டம்பரில் GST வசூல் 21% உயர்வு! ஒரே மாதத்தில் ரூ.10481 கோடி வருவாய்!

தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

webteam

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதன்படி தமிழகத்தில் இந்தாண்டு செப்டம்பரில் மட்டும் 10 ஆயிரத்து 481 கோடி ரூபாய் ஜிஎஸ்ட் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் 8 ஆயிரத்து 637 கோடி ரூபாயாக ஜிஎஸ்டி வசூல் இருந்தாகவும் நிதியமைச்சக புள்ளிவிவரம் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இந்திய அளவில் ஜிஎஸ்டி வசூல் 10 ஆக சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு 2 மடங்கு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல், கடந்த ஆண்டின் செப்டம்பருடன் ஒப்பிடுகையில் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.