தமிழ்நாடு

தமிழ்நாட்டில் முதன்முறை - ஆகஸ்ட் 13ல் தாக்கலாகிறது காகிதமில்லா பட்ஜெட்

PT WEB

தமிழ்நாட்டில் முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதி - நிலை அறிக்கை வரும் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது. இது வழக்கமாக புத்தக வடிவில் கையில் தரப்படும் பட்ஜெட்போல் அல்லாமல், காகிதம் இல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. மாறாக, உறுப்பினர்களின் இருக்கைக்கு முன் உள்ள மேசையில் கையடக்க கணினி வைக்கப்படும்.

இதனை நிரந்தரமாக பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் கொண்டு வரப்படும் இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் மின்னணு நிறுவனமான எல்காட் மூலம் கையடக்க கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் PDF வடிவில் கோப்புகள் அனுப்பி வைக்கப்படும். இந்த கையடக்க கணினியில் சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தவிர வேறு எதனையும் பார்க்க முடியாது. இ- பட்ஜெட் முறையால், காகிதச் செலவு மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.