தமிழ்நாடு

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ‘ரூ.500’ மளிகைப் பொருள்கள் - தமிழக அரசு

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ‘ரூ.500’ மளிகைப் பொருள்கள் - தமிழக அரசு

webteam

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.500 மதிப்புள்ள 19 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை தவிர வேறு தேவைகளுக்கு வெளியே செல்வதில்லை. இருப்பினும் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து உள்ளூர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததாக கூறப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் கண்டது. அதனை தடுக்க அரசு உடனே நடவடிக்கையும் எடுத்தது.

அந்த வகையில் மளிகைப் பொருட்களை மக்கள் மலிவான விலைக்கு பெறும் வகையில் ரூ.500 மதிப்பில் 19 வகையான மளிகைப் பொருட்கள் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்த அத்தியாவசியப் பொருட்களை ரேசன் கார்டு இல்லாத மக்களுக்கும் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ரேசன் கார்டு அல்லாதவர்களுக்கும் ரூ.500 மதிப்புகொண்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.