தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ள தமிழக அரசு, சிறப்பு ரயில்ளை கூடுதலாக இயக்க வேண்டுமென மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக 20 ஆயிரத்து 378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 16ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 268 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6 ஆயிரத்து 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக, அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை 15 ஆயிரத்து 129 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.