‘திருநங்கை’ என்பதற்கு பதிலாக மூன்றாம் பாலினத்தவர் என்ற சொல்லை பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஆணைகள் மற்றும் அறிக்கைகளில் மூன்றாம் பாலினத்தவரை குறிக்கும் போது ‘திருநங்கை’ என்று குறிப்பிடப்பட்டு வந்தது. இதனைத் தற்போது தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சமூகநலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இனிமேல் திருநங்கை என்ற சொல்லிற்கு பதிலாக மூன்றாம் பாலினத்தவர் என்ற பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் ஆண்டு வெளிவந்துள்ள அரசு அறிக்கையில் திருநங்கைகள் என்று இருந்த இடத்தில் கையால் மூன்றாம் பாலினத்தவர் என்று மாற்றி எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலகட்டத்தில் ‘திருநங்கை’ என்ற வார்த்தை கொண்டு வரப்பட்டது. இதனைத் தற்போது ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்று தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.