தமிழ்நாடு

ஆளுநர் வித்யாசாகர் ராவின் காரில் இருந்த சுழல் விளக்கு அகற்றம்

ஆளுநர் வித்யாசாகர் ராவின் காரில் இருந்த சுழல் விளக்கு அகற்றம்

Rasus

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவின் காரில் இருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஐபி கலாசாரத்தை ஒழிக்கும் நோக்கில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரமுகர்களின் காரில் இருந்து சிவப்பு சுழல் விளக்குகளை அகற்ற மத்திய அமைச்சரவை முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆளுநரின் முதன்மைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா, ஆளுநரின் காரில் இருந்த சிவப்பு சுழல் விளக்கை அகற்றியதாக கூறப்பட்டுள்ளது.