தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் அரசு ஏ.சி. பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் அரசு ஏ.சி. பேருந்துகள் இயக்கம்

கலிலுல்லா

தமிழ்நாட்டில் இன்று முதல் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் மாநிலம் முழுவதும் 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுவதற்கான அறிவிப்பையும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகரத்தில் 48 பேருந்துகளும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல 340 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்ட போக்குவரத்து கழகங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகின்றன.