தமிழ்நாடு

தமிழக அரசு ராக்கெட்ரி படத்தை பள்ளி கல்லூரிகளில் திரையிட வேண்டும் - வானதி சீனிவாசன்

webteam

தமிழக அரசு ராக்கெட்ரி திரைப்படத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டுக் காண்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் ராக்கெட்ரி திரைப்படத்தை பார்த்த பின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டியளித்;தார் அப்போது...

நாட்டிற்கு எப்படிப்பட்ட ஒரு நல்ல தலைமை தேவை என்பதை ராக்கெட்ரி படம் உணர்த்துகிறது. நம்பி நாராயணன் விஷயத்தில் என்ன நடந்திருக்கிறது என்பது படத்தைப் பார்த்தால் தெரிகிறது. தன்னலம் கருதாமல் நாட்டிற்காக உழைக்கும் நம்பி நாராயணன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் காணும்போது நாட்டுப்பற்று வளரும்.

தமிழக அரசின் நிர்வாகத் திறமையற்ற நடவடிக்கைகளால் தான் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மோடியை குற்றம்சாட்டுவது இவர்களுக்கு வாடிக்கை. மத்திய அரசு சொல்வது அனைத்தையும் இவர்கள் கேட்கிறார்களா? டாஸ்மாக் கட்டணத்தை உயர்த்தினால் கூட மத்திய அரசு தான் காரணம் என்று சொல்வார்களா என தெரிவித்தார்.