ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..
தமிழ்நாட்டில் குடியிருப்புப் பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் ஆகியவற்றில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வழிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் மக்களின் கருத்தைக் கேட்டறிந்து, ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் தெரு போன்ற பெயர்களை கட்டாயம் மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் இந்தப் பணிகளை நவம்பர் 11ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு காலக்கெடு விதித்துள்ளது.