அண்ணாமலை, தமிழக அரசு
அண்ணாமலை, தமிழக அரசு ட்விட்டர்
தமிழ்நாடு

“மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு தலைகீழாக நின்று தடுக்கிறது” - அண்ணாமலை குற்றச்சாட்டு

webteam

செய்தியாளர்: மா.ராஜாராம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டுள்ளார். முன்னதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலை பார்க்கலாம்...

# பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா?

அதற்கான நேரம் வரும்போது பார்க்கலாம்.

# பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் பணிக்குழு பணியை தொடங்கிவிட்டதா?

பாஜக 2014-ஆம் ஆண்டே தேர்தல் பணிக்கான நேரம் தொடங்கி விட்டது.

admk vs bjp

# அதிமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா?

நாங்கள் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். நேரம் வரும்போது எல்லாவற்றையும் சொல்கிறோம்.

# திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டது போன்று, அதிமுகவுக்கு ஏதேனும் பட்டியல் உள்ளதா?

அண்ணாமலை மட்டும் ஊழல் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். பத்திரிகையாளர்களும் சேர்ந்தால் இருவரும் சேர்ந்து பட்டியலை வெளியிடலாம்.

# பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கடந்த ஒரு வருடமாக செயல்படாமல் உள்ளது ஏன்?

பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பிஎம் கிஸான் சம்மான் திட்டம் போன்ற திட்டங்களுக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. பி.எம் கிஸான் திட்டத்தில் 6 லட்சம் விவசாயிகளின் கணக்குகள் டெலிட் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசு வாயிலாக செயல்படுத்தப்படும் நிலையில், இத்திட்டங்களை மாநில அரசு தலைகீழாக நின்று தடுக்கிறது.

cm stalin

100 நாள் வேலை திட்டத்தில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை. தீபாவளி பண்டிகையின் போது அவை சரிசெய்யப்பட்டுள்ளன. பங்குச் சந்தையில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் தாசில்தார் தாமதம் காரணமாக விடுபாடு ஏற்பட்டு இருக்கலாம்” என்றார்.