தமிழ்நாடு

ரேஷன் அரிசியை விற்போரின் குடும்ப அட்டைக்கு பொருள்கள் நிறுத்தம் - தமிழக அரசு தகவல்

JustinDurai
ரேஷன் அரிசியை விற்பனை செய்வோரின் குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல் குறித்த வழக்குப்பதிவு செய்யப்பட்ட கன்னியாகுமரியைச் சேர்ந்த குமார் என்பவர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரரிடம் பறிமுதல் செய்த அரிசியை ரேஷன் அரிசி என அடையாளம் காணப்பட்டது குறித்து அறிக்கை அளிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ரேஷன் கார்டுகளில் ஆதார் இணைக்கப்பட்டு கைரேகை பதிவின் மூலம் பொருட்கள் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது. ரேஷன் அரிசியை விற்பனை செய்வோரின் குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது. போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ஒழிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.