தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 3 லட்சத்து 65 ஆயிரத்து 318- ஆக இருந்த தெரு நாய் கடி சம்பவம் தற்போது, 2023-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 921-ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 1 லட்சத்து 24 ஆயிரம் தெரு நாய்கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த தெரு நாய் கடிகளால் 2017 ஆம் ஆண்டில் 16 பேர் உயிரிழந்தனர் 2014 ஆம் ஆண்டில் 47 பேர் 47 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் நான்கு வயது உடைய ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.
இப்படி நாளுக்குநாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் முதல் வாகனத்தில் செல்லும் நபர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பல தெருநாய்கள் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாய்கள் பொதுமக்களை கடிப்பதால் அவர்களும் இதனால், பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் நோய்வாய்ப்பட்டு தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தப் பணியை பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் எனவும், கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருநாய்களால் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படும் நிலையில் கால்நடைத் துறை சார்பில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.