தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் உயிரினங்களை பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கல்: துரித நடவடிக்கை எடுத்த அரசு

kaleelrahman

வன உயிரினங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகளின் உணவு, பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் என மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடியே 28 லட்சம் செலவாகிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பல மாதங்கள் தொடர்ந்து பூங்கா மூடப்பட்டிருப்பதால் அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் வன விலங்குகளுக்கு உணவு வழங்குவதிலும் பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து நிதி ஒதுக்குமாறு முதன்மை வனப்பாதுகாவலர் அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், உடனடியாக வனவிலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசின் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.