தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

webteam

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் 3 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்படி தற்போது 9 சதவிகிதமாக இருக்கும் அகவிலைப்படி 12 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு தற்போது அகவிலைப்படி பெற்றுவரும் அனைத்து முழு நேர ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.