அண்ணா பல்கலை, சென்னை உயர்நீதிமன்றம் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. வழக்கு | 17 பக்க அறிக்கை தாக்கல் செய்த தமிழக டிஜிபி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

PT WEB

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 13 சாட்சிகள் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தொடர்பாக 17 பக்கத்தில் டிஜிபி அறிக்கை அளித்துள்ளார். அதில், ஞானசேகரன் மீது ஏற்கனவே 35 வழக்குகள் உள்ளதாகவும், 5 வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலானாய்வு விசாரணை செய்து, வழக்கு மகிளா நீதிமன்றத்தில் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூன் 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.