தமிழ்நாடு

தமிழக அணைகளின் கொள்ளளவும், தற்போதைய நீர் மட்டமும்..!

தமிழக அணைகளின் கொள்ளளவும், தற்போதைய நீர் மட்டமும்..!

webteam

தமிழகத்தின் முக்கிய அணைகளில் மொத்த கொள்ளளவு குறித்தும் அவற்றில் தற்போதைய நீர் மட்டம் குறித்தும் பார்க்கலாம்.

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட வி‌வசாயிகள் பெரிதும் நம்பியுள்ள 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 40.08 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் நீர் மட்டம் 0.52 அடி அதிகரித்துள்ளது. 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது 111.90 அடியாக உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழையில்லாததால் நீர்மட்டம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.

120 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 51.6 அடியாகவும், 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 33.96 அடியாகவும் இருக்கிறது. வைகை அணையின் நீர்மட்டம் 31.04 அடியாக மட்டுமே உள்ளது. இதன் மொத்த உயரம் 71 அடி ஆகும். 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நீர் மட்டம் தற்போது 51.8 அடியாகவும், 118 அடி உயரமுள்ள மணிமுத்தாறு அணையில் நீர் மட்டம் 32.22 அடியாக இருக்கிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் 67.58 அடி அளவிற்கே உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 160 அடி ஆகும். அதேபோல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையில் தற்போது நீர்மட்டம் 23.3 அடியாக உள்ளது.