தமிழ்நாடு

கல்விக் கட்டணம் செலுத்தாததால் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவிக்கு காங். நிர்வாகி உதவி

கல்விக் கட்டணம் செலுத்தாததால் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவிக்கு காங். நிர்வாகி உதவி

rajakannan

வாணியம்பாடியில் கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளிக்கு வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவிக்கு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா உதவியுள்ளார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பணூர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் காயத்ரி என்ற மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை காயத்ரி செலுத்தவில்லை எனத் தெரிகிறது.

இதனால் மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்குமாறு தனியார் பள்ளி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. காலை முதல் மாலை வரை வெளியே நின்றதால் மாணவி காய்த்ரி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மாணவியை காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா நேரில் சந்தித்தார். அப்போது, கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக 30 ஆயிரம் ரூபாய் காசோலையை மாணவியிடம் அவர் வழங்கினார்.