முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

மே 23 முதல் வெளிநாடுகளுக்கு பயணம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - காரணம் இதுதான்!

Snehatara

முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

2024 ஜனவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு நிறுவனங்களை அழைக்கும் விதமாக பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள், பிரதிநிதிகளை சந்திப்பதற்கான செயல்திட்டங்கள் தமிழக அரசு சார்பில் வகுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழிற்துறையின் உயர் அலுவலர்கள் தொடர் வெளிநாடு பயணங்களை மேற்கொள்கின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலினும் மே 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லும் வகையில் பயணத்திட்டம் தயாராகியுள்ளது. 22ஆம் தேதி நள்ளிரவில் விமானம் மூலம் செல்லும் முதலமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள முதலீட்டிற்கான வாய்ப்புகள் குறித்து அந்நாடுகளுக்கு விளக்கி, அழைப்பு விடுக்கவிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து மே 30 ஆம் தேதி முதலமைச்சர் மீண்டும் சென்னை திரும்புகிறார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளது.