தமிழ்நாடு

ஆளுநருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை

ஆளுநருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை

rajakannan

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, தூத்துக்குடியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆளுநர் மாளிகையில் சுமார் 30 நிமிடங்கள் இந்த ஆலோசனை நீடித்தது. இதில், அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் பங்கேற்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், காவல்துறை எடுத்த நடவடிக்கை, துணை ராணுவம் தேவையா? என்பது குறித்து ஆளுநரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.