தமிழ்நாடு

மக்காச்சோள விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரண அறிவிப்பு

மக்காச்சோள விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரண அறிவிப்பு

rajakannan

அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தையடுத்து மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

தமிழத்தில் மக்காச்சோளம் முக்கியமான பயிராக உள்ளது. குறைவான தண்ணீர் பயன்பாட்டில் விளையும் என்பதால் விவசாயிகள் தற்போது இதனை அதிக அளவில் பயிரிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால், மக்காச்சோளம் சாகுபடி வெகுவாக பாதித்தது. இந்தப் பாதிப்பால் மக்காச்சோளம் பயிரிட்ட தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மக்காச்சோளம் பயிரிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 2 லட்சம் பேருக்கு ரூ.186.25 கோடி நிவாரணத்தை, விதிஎண் 110ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், பயிர் காப்பீடுத் திட்டத்தில் சேராத விவசாயிகள் விரைவில் சேர வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தினார்.