தமிழ்நாடு

“தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்க” - முதல்வர் கடிதம்

“தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்க” - முதல்வர் கடிதம்

JustinDurai

ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.   

தமிழ்நாட்டில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- ''தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. 

தற்போதைய கொரோனா சூழலை கருத்தில்கொண்டால் தமிழ்நாட்டிற்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும். ஆனால் தமிழகத்தில் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்றால் கடும் பற்றாக்குறை ஏற்படும். எனவே ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும்'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.