தமிழ்நாடு

8 புதிய நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

8 புதிய நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

webteam

தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட உள்ள 8 புதிய நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் இருந்தபடி அடிக்கல் நாட்டினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.

அவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிறுவனங்களில் 8 புதிய நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதன் மூலமாக 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் 3,185 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள 11 நிறுவனங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன் மூலம் 6,955 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.