ஆன்லைன் ரம்மி உள்பட பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்களை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை செய்ய அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனை தடை செய்ய பரிசீலித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்வதறகான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோர் குற்றவாளிகளாக கருதப்படுவர் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.