தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பல்வேறு துறைகளில் கொள்கை முடிவுகளை எடுப்பது குறித்தும் அமைச்சர்களுடன் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முனைப்புக்காட்டிவரும் நிலையில், அது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.