மரிய வில்சன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தவெக அரசின் முதல் பட்ஜெட்.. எந்தெந்த திட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்கீடு? விரிவான பார்வை!

அண்ணன் சீராக, பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு

Prakash J

2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று அறிவித்து வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான ஒதுக்கீடுகள் என்னவென்பது குறித்து இங்குப் பார்ப்போம்..

  • அரசுப் பள்ளிகளில் சூப்பர் CLEAN சூப்பர் CAMPUS திட்டம் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் செயல்படுத்த ரூ.139 கோடி ஒதுக்கீடு

  • பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கப்படும். இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு

  • தமிழ்நாட்டை கற்றல் வெளிப்பாடுகளில் முதன்மையான மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தில் பள்ளிப் பாடத்திட்டத்தை மறு சீரமைக்கும் வகையில் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும்; இதுகுறித்த விழிப்புணர்வுக்காக 10581 என்ற உதவி எண் பள்ளி வளாகங்களில் தெளிவாக காட்சிப்படுத்தபடும்; இத்திட்டத்தை செயல்படுத்த 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திய வெற்றி மடிக்கணினித் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு

  • மாநிலம் முழுவதும் மாணவர் தங்கும் வசதிகளை மேம்படுத்திட சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு 277 கோடி மதிப்பீட்டில் ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன ப்ராண்டன் சைக்கிள்கள் வழங்கப்படும்

  • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற புதிய தொழிற்பிரிவு தொடங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு

  • அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் அமைக்கப்படும். இதற்காக ரூ.3.38 கோடி நிதி ஒதுக்கீடு

  • ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

  • விளையாட்டில் ஆர்வம் கொண்ட 8 முதல் 18 வயதிற்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

  • தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு

  • அரசு நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு

  • அண்ணன் சீராக, பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு

  • 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு