தமிழ்நாடு

பி.இ தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியானது

பி.இ தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியானது

rajakannan

தமிழகத்தில் 2018ம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. 

பொறியியல் படிப்புகளுக்கான‌ தரவரிசைப் பட்டியலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை வெளியிட்டார். கலந்தாய்விற்கான தர‌வரிசைப் பட்டியலில் கீர்த்தனா ரவி என்ற மாணவி முதலிடம் பெற்றார். முதல் இடங்களை பிடித்த 10 மாணவ மாணவிகளின் பெயர்களை மட்டும் அவர் வெளியிட்டார். அதனையடுத்து தரவரிசை பட்டியல் இணையதளத்தில் உடனடியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரவரிசை பட்டியல் வெளியாகவில்லை. 

நண்பகல் 12 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதியம் 2.45 மணிக்கு வெளியாகியுள்ளது. http://www.annauniv.edu மற்றும் http://www.tnea.ac.in என்ற இணையதளங்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.