Software exports web
தமிழ்நாடு

மென்பொருள் ஏற்றுமதியில் முன்னோக்கி நகரும் தமிழகம்.. செங்கல்பட்டு முதலிடம்!

1.05 லட்சம் கோடி ரூபாய் மென்பொருள் ஏற்றுமதியுடன் செங்கல்பட்டு தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

PT WEB

தமிழகத்தின் மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தின் மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மதுரையைச் சேர்ந்த மென்பொறியாளர் சரவணகுமார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களின்படி, தமிழக அளவில் 2025-26 நிதியாண்டில் செங்கல்பட்டு மாவட்டம் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன் முதலிடம் பிடித்துள்ளது.

மென்பொருள்

சென்னை 66 ஆயிரத்து186 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன் இரண்டாமிடத்திலும், கோவை 13 ஆயிரத்து 286 கோடி ரூபாயுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன. மதுரை ஆயிரத்து 851 கோடி ரூபாய், சேலம் 159 கோடி ரூபாய், திருச்சி 146 கோடி ரூபாய், நெல்லை 40 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.